×

லாலுவுக்கு நெருக்கமானவரின் ரூ.113 கோடி சொத்து பறிமுதல்

புதுடெல்லி: லாலுபிரசாத்திற்கு நெருக்கமானவரின் ரூ.113 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கியது தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் லாலுவின் நெருங்கிய கூட்டாளி என்று அழைக்கப்படும் அமித்கத்யால் என்பவரை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவருக்கு சொந்தமான குருகிராமில் உள்ள 70 ஏக்கர் நிலம், அடுக்குமாடி குடியிருப்புகள், மும்பையில் சில குடியிருப்புகள், டெல்லியில் ஒரு பண்ணை வீடு உள்ளிட்டவை உள்பட சுமார் ரூ.113 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

The post லாலுவுக்கு நெருக்கமானவரின் ரூ.113 கோடி சொத்து பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Lalu ,New Delhi ,Enforcement Directorate ,Laluprasad ,The Enforcement Directorate ,Bihar ,Chief Minister ,Lalu Prasad Yadav ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக இந்திய...