×

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்..!!

சென்னை: அருந்ததியர் இட ஒதுக்கீடு பற்றி பொய்யான அறிக்கை வெளியிடுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2009-ல் திமுக ஆட்சிக்காலத்தில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது என ஆதித்தமிழர் பேரவை தெரிவித்தது. அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. திமுகவிற்கு புகழ் சேர்ந்துவிடுமோ என அஞ்சி, எடப்பாடி பழனிசாமி பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தனக்குத்தானே புகழ்மாலை சூட்டி அறிக்கை விட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஆதித்தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

The post எடப்பாடி பழனிசாமிக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Adithamizhar Assembly ,CHENNAI ,Arundhathiyar ,Tamil Nadu ,DMK ,
× RELATED தமிழ்நாட்டில் காவல்துறையினர் உள்பட...