×

சணப்பு, தக்கை பூண்டு, நரிப்பயிறு உள்ளிட்ட பசுந்தாள் உரம் மண்ணின் மலட்டு தன்மையை நீக்கும்: விளைச்சலை கூட்டும் திறன் மிக்கது


வலங்கைமான்: சண ப்பு, தக்கை பூண்டு, நரிப்பயிறு உள்ளிட்ட பசுந்தாள் உரம் மண்ணின் மலட்டு தன்மை நீங்கும், விளைச்சலையும் கூட்டும் திறன் மிக்கது என்று வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,பசுந்தாள் உரம் என்பது பசுமையான சிதைக்கப்படாத பொருள்களை உரமாகப் பயன்படுத்துதல் ஆகும். இரண்டு வழிகளில் இதைப் பெறலாம். பசுந்தாள் பயிர்களை வளர்ப்பதன் மூலமோ அல்லது தரிசுநிலம், வயல் வரப்பு, காடுகளில் வளரும் மரங்களிலிருந்தோ எடுத்தும் பயன்படுத்தலாம். பசுந்தழைகளின் மூலமும் பெறலாம்.

பசுந்தாள் உரம் என்பது பயிறு வகைகளை பயிரிட்டு, பின் போதுமான வளர்ச்சி அடைந்தவுடன் மண்ணில் உழவேண்டும். பசுந்தாள் உரத்திற்காக வளர்க்கப்படும் பயிர்கள் பசுந்தாள் உரப்பயிர்களாகும். சணப்பு, தக்கைப் பூண்டு, நரிப் பயிறு, கொத்தவரை, அகத்திபசுந்தாள் உரச் செடிகள் வளரும்போதே நிலத்திற்கு உரத் தன்மை ஊட்டுபவை. இவ்வகைப் பயிர்களைப் பயிர் செய்வதால் மண்ணின் வளம் கூடுகிறது. இப்பயிர்களின் வேர்க்குமிழ்களில் ரைசோபியம் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் காற்றிலுள்ள நைட்ரஜனை எடுத்து வேரில் நிலை நிறுத்துகின்றன. இதனால் மண்ணின் வளம் கூடுகிறது. இந்த வகைப் பயிர்கள் வளர்ந்த நிலத்தில் பயிர் செய்யும்போது விளைச்சல் கூடுகிறது.

பயறு வகைப்பயிர்களான துவரை, தட்டை, கொள்ளு, அவரை, மொச்சை, உளுந்து, பச்சைப் பயறு, பட்டாணி, கொண்டைக்கடலை இவற்றை ஊடுபயிராகப் பயிர் செய்யலாம்.பசுந்தழை உரங்களை வேறு இடங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட இலைகள், மரங்களின் கொம்புகள், புதர்செடி, சிறு செடிகளை உபயோகித்தலும் ஆகும். காட்டு மரங்களின் இலைகள் தான் பசுந்தழை உரத்தின் முக்கிய மூலதனம் ஆகும். பயிரிடப்படாத நிலங்கள், வயல் வரப்பு மற்றும் வேறு இடங்களில் வளரக்கூடிய செடிகளும் பசுந்தழை எருவிற்கான மற்றொரு ஆதாரம் ஆகும்.வேம்பு, இலுப்பை, கொளுஞ்சி, சிலோன் வாகை, புங்கம் எருக்கு, அகத்தி , சுபாபுல் மற்றும் மற்ற புதர் செடிகள்.இவ்வாறு பசுந்தாள் உரங்களை பயன்படுத்தி மண்ணின் வளத்தை மேம்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

The post சணப்பு, தக்கை பூண்டு, நரிப்பயிறு உள்ளிட்ட பசுந்தாள் உரம் மண்ணின் மலட்டு தன்மையை நீக்கும்: விளைச்சலை கூட்டும் திறன் மிக்கது appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,Department of Agriculture ,
× RELATED வலங்கைமான் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு நேர்த்திக்கடன்