×

பாம்பன் மீனவர் தூண்டிலில் மெகா சைஸ் மயில் மீன் சிக்கியது: மணிக்கு 110 கிமீ வரை நீந்துமாம்

ராமேஸ்வரம்: பாம்பன் நாட்டுப்படகு மீனவர் தூண்டிலில் மெகா சைஸ் மயில் மீன் சிக்கியது. கடல்வாழ் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக் கூடியது தளப்பத்து எனும் மயில் மீன் ஆகும். இது மணிக்கு சராசரியாக 100 கி.மீ முதல் 110 கி.மீ வரையிலும் நீந்த கூடியது. முதுகு பகுதி விரித்த மயிற்தோகைப் போன்ற அமைப்பு கொண்டிருப்பதால் இதனை மீனவர்கள் மயில் மீன் என்று அழைக்கின்றனர். இதன் வாய் கூர்மையாக இருப்பதால் குத்தி சேதப்படுத்தும் தன்மை கொண்டது. ஆழ்கடலில் வெதுவெதுப்பான இடத்தில் காணப்படும் இந்த மீன் பெரும்பாலும் பாக்ஜலசந்தி கடலில் அதிகம் உள்ளது.

மேலும் தூண்டில் மீன் பிடிப்பில் மட்டுமே அதிகம் சிக்கும். அந்த வகையில் பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று நேற்று கரை திரும்பிய நாட்டுப் படகு மீனவர்கள் தூண்டிலில் மெகா சைஸ் மயில் மீன் சிக்கியது. சுமார் 6 அடி நீளமுடைய இந்த மீன், 50 கிலோ எடை இருந்தது. இந்த மீன் ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனையானது.

The post பாம்பன் மீனவர் தூண்டிலில் மெகா சைஸ் மயில் மீன் சிக்கியது: மணிக்கு 110 கிமீ வரை நீந்துமாம் appeared first on Dinakaran.

Tags : Pamban ,Rameswaram ,Pampan ,
× RELATED பாம்பன் பாலத்தில் நாளை மறுநாள் தூக்குப்பாலத்தை இயக்கி சோதனை