×

மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட பிரியாணி மேன் மேலும் ஒரு வழக்கில் கைது

சென்னை: மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட அபிஷேக் ரபி என்பவரை சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிப்படுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் மொழி சைகை மூலம் பிரபல யூடியூபர் ‘பிரியாணி மேன்’ தனது யூடியூப் சேனலில் வீடியோ பதிவு செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பெண் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.

அதன்பேரில், சென்னை தெற்கு சைபர் க்ரைம் போலீசார், பிரியாணி மேன் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அவர் செம்மொழி பூங்கா மற்றும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியது உறுதியானது. அதைதொடர்ந்து பிரியாணி மேன் என்ற அபிஷேக் ரபி மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பிரியாணி மேன் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட அபிஷேக் ரபி என்பவரை சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் பிரியாணி மேன் என அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் கடந்த சில தினங்களுக்கு முன் தனது யூடியூப் சேனலில் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை கண்ட அவரது நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு தற்கொலை முயற்சியில் இருந்து தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட பிரியாணி மேன் மேலும் ஒரு வழக்கில் கைது appeared first on Dinakaran.

Tags : Biryani ,CHENNAI ,Abhishek Rabi ,Cyber Crime Police ,Chennai Metropolitan ,East Zone ,Semmozhi Park ,
× RELATED கோவையில் பிரியாணி சாப்பிடும் போட்டி:...