ஓசூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது. ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து இன்று வினாடிக்கு 8,000 கனஅடியாக சரிந்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
The post ஒகேனக்கல் நீர்வரத்து சரிவு: பரிசல் இயக்க அனுமதி appeared first on Dinakaran.