×

சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்

கமுதி, ஆக.8: கமுதியில் பெரிய தர்ஹா என்று அழைக்கப்படும் முஸாபர் அவுலியா தர்ஹா சந்தனகூடு திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக சுந்தரபுரம் தைக்கா வீட்டிலிருந்து கொடியை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து தர்ஹாவிற்கு கொண்டு வந்தனர். பின்னர் தர்ஹா முன்பு உள்ள கொடிமரத்தில், தர்ஹா நிர்வாக கமிட்டி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வரும் 15ம் தேதி இரவு சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.

The post சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Sandalwood festival flag ,Kamudi ,Muzaffar ,Auliya Darha ,Big Darha ,Sundarapuram ,Taikka ,Darha ,Sandalwood festival ,
× RELATED மாரியம்மன் கோயிலில் கொள்ளைக்காரன் பூஜை