×

போலீஸ் நிலையம் முற்றுகை

கமுதி, ஆக.8: கமுதி அருகே கள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்(41). இவருக்கும் இலந்தை குளத்தை சேர்ந்த செல்வகுமார்(21) இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி பேரையூரில் ஒருவரை ஒருவர் தாக்கியபோது, காயமடைந்த பெருமாள் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்தார். தகராறின் போது செல்வகுமாருடன் கோகுல் மற்றும் மணி இருந்துள்ளனர். பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வக்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். நேற்று இறந்த பெருமாள் உறவினர்கள், கோகுல், மணி ஆகியோரை கைது செய்யக்கோரி பேரையூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசாரின் சமரசத்தால் கலைந்து சென்றனர்.

The post போலீஸ் நிலையம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Perumal ,Kallikkulam ,Selvakumar ,Ilandai Kulan ,Beraiyur ,Madurai Government Hospital ,Dinakaran ,
× RELATED டிரைவர் கொலையில் மறியலை தடுக்க முயன்ற...