×

காரைக்குடியில் மழைநீர் கால்வாய் அமைக்க ஆய்வு

காரைக்குடி, ஆக. 8: காரைக்குடியில் உள்ள கொப்புடையநாயகி அம்மன் கோயில் பகுதியில் மழைக்காலத்தின்போது, மழைநீர் வெளியேற வழியின்றி அப்பகுதியில் உள்ள கடைகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனை தடுக்க அப்பகுதியில் கால்வாய் கட்டி தர வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று அப்பகுதியில் மழைநீரை வெளியேற்ற கால்வாய் அமைப்பது தொடர்பாக எம்எல்ஏ மாங்குடி தலைமையில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சந்திரன், காரைக்குடி உதவி கோட்ட பொறியாளர் ஸ்ரீனிவாசன், உதவிப் பொறியாளர் பூமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் எம்எல்ஏ மாங்குடி கூறுகையில், ‘‘இப்பகுதியில் கால்வாய்கள் வழியாக முறையாக மழைநீரை வெளியேற்றும் வகையில் கால்வாய் அமைக்கப்படும். அரசின் உரிய அனுமதி பெற்று விரைவில் பணி துவங்கப்படும்’’ என்றார். ஆய்வின்போது நகர் காங்கிரஸ் தலைவர் பாண்டிமெய்யப்பன், செயலாளர் குமரேசன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

The post காரைக்குடியில் மழைநீர் கால்வாய் அமைக்க ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Koppudayanayaki Amman Temple ,
× RELATED கொற்றவனுக்கு அருளிய கொற்றவாளீஸ்வரர்