- வோடியார்பாளையம் சிவன் கோவில் குளம்
- ஜெயங்கொண்டம்
- அரியலூர் மாவட்ட காவல்துறை
- உதயர்பாளையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பொது இயக்குனர்
- சங்கர் ஜிவால்
- அரியலூர் மாவட்டம்
- கண்காணிப்பாளரை
- செல்வராஜ்
- அரியலூர் மாவட்ட காவல்துறை மாநிலம்
ஜெயங்கொண்டம், ஆக. 8: அரியலூர் மாவட்ட காவல்துறையினருக்கு உடையார்பாளையத்தில் பேரிடர் மீட்பு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால், உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் வழிகாட்டுதலின்படியும் அரியலூர் மாவட்ட காவல்துறையினருக்கு மாநில பேரிடர் மீட்பு படை குழுவினரால் கடந்த 5ம் தேதி முதல் 3 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக உடையார்பாளையம் சிவன் கோயில் தெப்பக்குளத்தில் மாநில பேரிடர் மீட்பு குழு கமாண்டர் செல்வராஜ் தலைமையில் காவல்துறையினருக்கு மிதவை படகு இயக்கம், பாதுகாப்பு உபகரணங்கள் உபயோகம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் கால முன்னெச்சரிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சியில் சட்ட ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
The post முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடையார்பாளையம் சிவன் கோயில் குளத்தில் பேரிடர் மீட்பு செயல் விளக்க பயிற்சி appeared first on Dinakaran.