- கிராம உதவியாளர்கள் சங்கம்
- ஜெயங்கொண்டம்
- ஆண்டிமடம் மாவட்ட ஆட்சியர்
- தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கம்
- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்
- தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்க வட்டம்
- ஜனாதிபதி
- வேல்முருகன்
- கிராம உதவியாளர் சங்கம்
- தின மலர்
ஜெயங்கொண்டம், ஆக. 8: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்க வட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் கணபதி சிறப்புரை நிகழ்த்தினார். அரசாணை 33 உரிய திருத்தம் மேற்கொண்டு தொடர்ந்து கருணை அடிப்படை பணி நியமனம் கிராம உதவியாளர்களுக்கு வழங்கிட வேண்டும், சி.பி.எஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மற்றும் இறந்த கிராம உதவியாளர்களுக்கு சி.பி.எஸ் இறுதி தொகை உடனடியாக வழங்கவேண்டும், கிராம உதவியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக வட்ட செயலாளர் பழனிவேல் வரவேற்றார். நிறைவில் வட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
The post கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி கிராம உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.