×

குத்தாலம் அருகே மேலையூரில் பாலம் கட்டுமானப் பணி கோட்டப்பொறியாளர் ஆய்வு

குத்தாலம், ஆக.8: குத்தாலம் அருகே மேலையூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் சிறிய பாலம் கட்டுமான பணியை கோட்டப்பொறியாளர் பாலசுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் சிறு பாலங்கள் கட்டுதல் பணிகளை நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டப்பொறியாளர் பாலசுப்ரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

தேரழுந்தார்-திருவாடுதுறை சாலையில் மேலையூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த சிறு பாலங்கள் கட்டுதல் பணிகளை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பணிகளை மழைக்காலம் மற்றும் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் முன்பே முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். மேலும், குத்தாலம்-கோமல் சாலையில் தேரழுந்தூரில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்துதல் மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணியையும் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, உதவிக் கோட்டப் பொறியாளர் இந்திரன் உடன் இருந்தார்.

The post குத்தாலம் அருகே மேலையூரில் பாலம் கட்டுமானப் பணி கோட்டப்பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Melaiyur ,Kutthalam ,Guttalam ,Engineer ,Balasubramanian ,Highways Department ,Department of Highways ,and Maintenance ,Mayiladuthurai District ,Dinakaran ,
× RELATED குத்தாலம் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற...