×

கூரியர் அலுவலகத்தில் ரூ.11 ஆயிரம் திருட்டு

பல்லடம், ஆக. 8: பல்லடம்-தாராபுரம் ரோடு பிரிவில் கூரியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல் அந்நிறுவனத்தில் வேலை செய்து விட்டு ஊழியர்கள் இரவு பூட்டி விட்டு சென்றனர். மீண்டும் மறுநாள் காலை அலுவலகத்தை திறக்க சென்ற போது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடந்த ஊழியர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, அலுவலகத்தில் வைத்திருந்த ரூ.11 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கூரியர் அலுவலகத்தில் ரூ.11 ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Palladam ,Palladam-Dharapuram road ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே நீர் நிலையை...