×

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

தூத்துக்குடி, ஆக. 8: தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம், எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனு கொடுக்க வந்த 41 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எஸ்பி, உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த முகாமில் ஏடிஎஸ்பிக்கள் உன்னிகிருஷ்ணன், ஆறுமுகம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Tags : People's grievance redressal camp ,Thoothukudi SP ,Tuticorin ,People's Grievance Redressal Day Camp ,Tuticorin District SP Office ,SP ,Balaji Saravanan ,Director General ,Tamilnadu Police ,Thoothukudi district ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி சிறையில் மோதல் சம்பவம்: 46 கைதிகள் மீது 6 பிரிவுகளில் வழக்கு