×

காஞ்சிபுரத்தில் கலைஞர் நினைவு தினத்தையொட்டி திமுகவினர் அமைதி பேரணி: எம்எல்ஏ சுந்தர் தலைமையில் நடந்தது

காஞ்சிபுரம், ஆக.8: காஞ்சிபுரத்தில் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று, உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணியாக சென்று, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு அமைதி பேரணி நேற்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏவும், மாநில மாணவர் அணி செயலாளருமான ஏழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார்.

இதில், திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து காஞ்சிபுரம் பெரியார் தூணில் இருந்து காந்தி ரோடு, ரங்கசாமி குளம், டிகே நம்பித்தெரு வழியாக ஊர்வலமாக கலைஞர் பவளவிழா மாளிகைக்கு சென்று, கலைஞரின் உருவச்சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி, ஒன்றிய செயலாளர்கள் குமார், சேகர், படுநெல்லி பாபு, குமணன், குமார், மாநகர துணை செயலாளர் முத்துசெல்வம், ஜெகநாதன், பொருளாளர் சுப்பராயன், செங்குட்டுவன், இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், மகளிர் அணி செல்வி, தொமுச சார்பில் சுந்தரவாதனம், இளங்கோவன், மாணவரணி துணை செயலாளர் சுரேஷ்குமார், சண்முகசுந்தரம், பகுதி செயலாளர்கள் சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

The post காஞ்சிபுரத்தில் கலைஞர் நினைவு தினத்தையொட்டி திமுகவினர் அமைதி பேரணி: எம்எல்ஏ சுந்தர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Dimugvinar Peace Rally ,MLA ,Sundar ,Kancheepuram ,Kanchipuram ,Uthramarur ,MLA Sundar ,Former Chief Minister of Kanchipuram ,Southern District ,Dimuka ,Artist Memorial Day ,Dinakaran ,
× RELATED இடைக்கழிநாடு பேரூராட்சியில் பொங்கல்...