சேந்தமங்கலம், ஆக.8: புதுச்சத்திரம் வட்டாரத்தில், விவசாயிகளுக்கு பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடந்தது. புதுச்சத்திரம் வட்டார வேளாண்மைத் துறையின் மூலம், அட்மா திட்டத்தின் கீழ், பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து தத்தாதிரிபுரம் கிராமத்தில் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் இந்திராணி தலைமை வகித்தார். வேளாண்மை துணை இயக்குநர் கோவிந்தசாமி, பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். இதில் வேளாண்மைத் துறையின் மானிய திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகள் விவரத்தை பதிவேற்றம் செய்வதின் அவசியம், பயறு வகை பயிர்களின் விதை தேர்வு செய்யும் முறை, பயிர் காப்பீடு, பிரதம மந்திரி கவுரவ நிதி பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் துணை வேளாண் அலுவலர் மாதேஸ்வரன், வேளாண் அலுவலர் சாரதா, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சிந்துஜா, உதவி மேலாளர்கள் சோனியா, மேனகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி appeared first on Dinakaran.