×
Saravana Stores

நீர்நிலைகள் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

மோகனூர், ஆக.8: நாமக்கல் மாவட்டத்தில், பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, அனைத்து நீர் வழிப்பாதைகளில், மழை நீர் செல்வதற்கு ஏதுவாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மோகனூரில் தோப்பூர், வளையப்பட்டி, ஆண்டாபுரம், பரளி சாலைகள், தோளூர், லத்துவாடி பகுதிகளில் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பாலங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல அணியாபுரம், எர்ணாபுரம், வேட்டாம்பாடி, தும்மங்குறிச்சி, நல்லிபாளையம் பகுதிகளில் உள்ள பாலங்களில் அடைப்பு ஏற்படாதவாறு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

The post நீர்நிலைகள் சீரமைப்பு பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Namakkal district ,Moganur ,Dhoppur ,Krangapatti ,Andapuram ,Parali roads ,Tolur ,Lathuwadi ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...