×

ஆடிப்பூர விழா

நத்தம், ஆக. 8: நத்தம் அருகே சிறுகுடியில் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பலவகை சாதங்கள் அடங்கிய அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிறுகுடி கிராமமக்கள் செய்திருந்தனர்.

The post ஆடிப்பூர விழா appeared first on Dinakaran.

Tags : Aadipura festival ,Nadham ,Durgaiyamman ,Sirukudi ,Natham ,Deeparathanam ,
× RELATED நத்தம் புறம்போக்கு நிலத்தில்...