×

திருவட்டாரில் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

குலசேகரம்,ஆக.8: பருவமழை தொடர்ச்சியாக பெய்து வந்த நிலையில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சுகாதார துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் வழங்கப்பட்டது. இதனை திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகனராஜ் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கினர்.

The post திருவட்டாரில் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Thiruvattar ,Kulasekaram ,Tamil Nadu Government Health Department ,Thiruvattar Municipality ,
× RELATED குலசேகரம் அருகே பரிதாபம் நீரில் மூழ்கி டிரைவர் பலி