- அமித் சிங்
- பிரதமரின் அலுவலகம்
- புது தில்லி
- பணியாளர் நலன்புரி ஒன்றிய அமைச்சு
- அமித் சிங் நேகி
- செலவினத் துறை
- நிதி அமைச்சகம்
- பிரதமர் அலுவலகம்
- உத்தரகண்ட்
- தின மலர்
புதுடெல்லி: ஒன்றிய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறையின் இணை செயலாளராக உள்ள அமித் சிங் நெகி பிரதமர் அலுவலகத்தில்(பிஎம்ஓ) கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமித் சிங் நெகி 1999ம் ஆண்டு உத்தரகாண்ட் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஐஆர்எஸ் அதிகாரி சமீர் அஸ்வின் வக்கில் தீவிர பொருளாதார மோசடிகளை விசாரிக்கும் அமைப்பின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகளான மனிஷ் கர்க், சஞ்சய் குமார் மற்றும் அஜித் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் துணை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாதுறையின் இயக்குனர் ஜெனரலாக உள்ள மனிஷ் சக்சேனா ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
The post பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக அமித்சிங் நியமனம் appeared first on Dinakaran.