×

முதுகலை நீட் கேள்வித்தாள் வெளியானதா? தேசிய தேர்வு முகமை மறுப்பு

புதுடெல்லி: முதுகலை நீட் கேள்வித்தாள் வெளியானதாக எழுந்த தகவலை தேசிய தேர்வு முகமை மறுத்து உள்ளது. முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு இந்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான கேள்வித்தாள் டெலிகிராம் சேனலில் வெளியானதாக தகவல் வெளியானது. இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த தகவல் தவறானது என்று தேசிய தேர்வு முகமை மறுத்து உள்ளது. மேலும்,’நீட்-பிஜி 2024க்கான வினாத்தாள்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை. சமூக ஊடக தளங்களில் கேள்வித்தாள் கசிவு பற்றிய செய்திகள் போலியானது. மேலும் இந்த போலி தகவல் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் யாரேனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவது அல்லது உண்மைகளை சரிபார்க்காமல் வதந்திகளை வெளியிடுவது, பரப்புவது சட்டப்படி கையாளப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முதுகலை நீட் கேள்வித்தாள் வெளியானதா? தேசிய தேர்வு முகமை மறுப்பு appeared first on Dinakaran.

Tags : National Examination Agency ,New Delhi ,National Examinations Agency ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற யூடியூப் சேனல் முடக்கம்