- வங்காளம்
- சென்னை
- புதிய தமிழரசுக் கட்சி
- ஜனாதிபதி
- டாக்டர்
- கிருஷ்ணசாமி
- ஹசீனா பேகம்
- இந்தியா
- கிருஷ்ணசுவாமி
- தின மலர்
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:வங்க தேசம் இன்று வரையிலும் ஒரு மதசார்பற்ற நாடாகவே இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஹசீனா பேகம் அந்நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். அவர் இந்திய நாட்டோடு நெருங்கிய நட்பில் இருக்கிறார். வங்கதேசம் ஒரு அடிப்படை இஸ்லாமிய நாடாக இருந்திட வேண்டும் என்ற சித்தாந்தத்தை சேர்ந்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாகவே இப்போது அங்கு ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்றுள்ளது. அதேநேரம் நமது ஆட்சியாளர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் குறுகிய கண்ணோட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு இந்தியா என்ற ஒற்றை உணர்வோடு ஒருங்கிணைந்து நிற்க வேண்டியதே வங்க தேசத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய அண்மைக் கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும் பாடம்.
The post வங்கதேச ஆட்சி கவிழ்ப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரு எச்சரிக்கை: கிருஷ்ணசாமி அறிக்கை appeared first on Dinakaran.