- சிவகிரி
- சிவகிரி ஊராட்சி ஒன்றியம் ஜவகர் நடுநிலைப்பள்ளி
- பள்ளி தலைமை
- பி) பரமசிவன்
- வாசுதேவநல்லூர்
- யூனியன்
- பொன் முத்தையா பாண்டியன்
- தின மலர்
சிவகிரி, ஆக. 8: சிவகிரி ஊராட்சி ஒன்றிய ஜவகர் நடுநிலைப்பள்ளிக்கு சிசிடிவி கேமரா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் (பொ) பரமசிவன் வரவேற்றார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை வகித்து பள்ளிக்கு 8 சிசிடிவி கேமராக்களை வழங்கினார். பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி, திமுக மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள் ஜோசப் ராஜா, முருகவேணி, குருவம்மாள், பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியமேரி, ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், பேரூர் செயலாளர் சேது சுப்பிரமணியன், சுந்தரவடிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் அருணா நன்றி கூறினார்.
The post சிவகிரியில் அரசு பள்ளிக்கு சிசிடிவி கேமரா வழங்கல் appeared first on Dinakaran.