×

கலவரத்தை காரணம் காட்டி இங்கிலாந்து பயணம் ரத்து? ஆதரவாளர் மூலம் நாடகமாடும் அண்ணாமலையின் மறைமுக திட்டம்

சென்னை: அண்ணாமலை தனது பயணத்தை ரத்து செய்ய திட்டமிட்டு, தனது ஆதரவாளர் மூலம் வேண்டுகோள் விடுக்க வைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜ தலைமையில் தனி அணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அண்ணாமலை டெல்லி சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். கடிதம் வாங்க மாட்டார்கள் என் நினைத்தார். ஆனால் அகில இந்திய தலைவர் நட்டா வாங்கிக் கொண்டதால் அதிர்ச்சி அடைந்தார். தன்னை மேலிடம் நீக்கிவிடும் என்பதை தெரிந்து கொண்ட அண்ணாமலை, கடந்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க விரும்பினார். ஆனால் அவர்கள் சந்திக்க மறுத்துவிட்டனர்.

உடனே நட்டாவிடம் சென்று இங்கிலாந்துக்கு படிப்புக்கு செல்வது குறித்து பேசியுள்ளார். அப்போது வெளிநாட்டில் இருந்தபடியே கட்சியை கவனித்துக் கொள்கிறேன் என்று கேட்டிருக்கிறார். அதற்கு நட்டா பிடிகொடுக்கவில்லை. என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று கூறிவிட்டார். டெல்லி மேலிடம் அவரது பதவியை பறிப்பதிலேயே குறியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்தின் பல பகுதிகளில் போராட்டம், கலவரம் நடந்து வருகிறது. வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால், இந்தியர்கள் கவனத்துடன் இருக்குமாறு லண்டனில் இருக்கும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டி, ‘இங்கிலாந்துக்கு பயணம் செய்வது தற்போது உள்ள நிலையில் பாதுகாப்பானதாக இல்லை’ என்று கூறியுள்ளார். இதன் மூலம் அண்ணாமலை தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை மறைமுகமாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அண்ணாமலையே, அமர்பிரசாத் ரெட்டியை அழைத்து இந்த டிவிட்டர் செய்தியை வெளியிட வைத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் தனது பயணத்தை பாதுகாப்பு காரணம் காட்டி ரத்து செய்து விட்டால், தமிழகத்தில் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது அண்ணாமலை பயங்கர குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post கலவரத்தை காரணம் காட்டி இங்கிலாந்து பயணம் ரத்து? ஆதரவாளர் மூலம் நாடகமாடும் அண்ணாமலையின் மறைமுக திட்டம் appeared first on Dinakaran.

Tags : England ,Annamalai ,CHENNAI ,Lok Sabha elections ,Tamil Nadu ,BJP ,
× RELATED சில்லிபாயிண்ட்….