- Vinesh
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- சென்னை
- வினேஷ்…
- மு.கே ஸ்டாலின்
- மு.கே ஸ்டாலின்
- வினேஷ் போகத்
- ஒலிம்பிக்
சென்னை: வினேஷ்… நீங்கள் பதக்கத்தை தவறவிட்டிருக்கலாம். ஆனால், அனைவரது இதயங்களையும் வென்றுவிட்டீர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: வினேஷ்… ‘எல்லா’ வகையிலும் நீங்கள் ஓர் உண்மையான சாம்பியன்!
எதிலிருந்தும் மீண்டு வரும் உங்கள் திறன், வலிமை மற்றும் ஒலிம்பிக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய உங்களது தனிச்சிறப்பான பயணம் ஆகியவை இந்தியாவின் லட்சக்கணக்கான மகள்களுக்கு ஊக்கமளித்துள்ளன.சில கிராம்களின் காரணமாக செய்யப்பட்ட தகுதிநீக்கம் உங்களது மன ஆற்றலையோ சாதனைகளையோ குறுக்கிவிட முடியாது. நீங்கள் பதக்கத்தை தவறவிட்டிருக்கலாம். ஆனால், உங்களது இணையற்ற மனவுறுதியினால் அனைவரது இதயங்களையும் வென்றுவிட்டீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post வினேஷ்… நீங்கள் பதக்கத்தை தவறவிட்டிருக்கலாம் அனைவரது இதயங்களையும் வென்றுவிட்டீர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.