×

வினேஷ் விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சி செய்தும் பலனில்லை என ஒன்றிய அமைச்சர் கூறியதற்கு எதிர்ப்பு

டெல்லி: வினேஷ் விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சி செய்தும் பலனில்லை என ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி வழங்கப்படாததால் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். வினேஷ் போகத்துக்கு நியாயம் வேண்டும் என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் முழக்கமிட்டனர். வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

The post வினேஷ் விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சி செய்தும் பலனில்லை என ஒன்றிய அமைச்சர் கூறியதற்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Indian Olympic Association ,Vinesh ,Delhi ,Lok Sabha ,Union Sports ,Minister ,Rajya Sabha ,India ,
× RELATED இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா...