×

ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு

ஹயக்ரீவா சினி ஆர்ட்ஸ் சார்பில், ராமானுஜர் வாழ்க்கை சம்பவங்களை எல்லாம் தொகுத்து திரைக்கதை எழுதி தயாரித்து, ராமானுஜர் வேடத்தில் டி.கிருஷ்ணன் நடித்துள்ள படம், ‘ஸ்ரீராமானுஜர்’. மற்றும் ராதாரவி, கோட்டா சீனிவாச ராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன், அனு கிருஷ்ணா, காயத்ரி, சோனியா சிங் வாலா, கவுதமி நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். வாலி பாடல்கள் எழுத, மாதவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரங்கமணி வசனம் எழுதியுள்ளார். ரவி வி.சந்தர் இயக்கியுள்ளார்.

படம் குறித்து டி.கிருஷ்ணன் கூறுகையில், ‘ராமானுஜர் இந்து மதத்தில் புரட்சி செய்த மகான் மட்டுமல்ல, இந்து தர்மத்தின் லெஜண்ட் ஆவார். சாதி வேறுபாடற்ற சமுதாயம் வேண்டும் என்றும், எல்லா மதத்தினருக்கும் நற்கதி என்ற உணர்வையும் மக்களிடையே உருவாக்கியவர். மறைந்த கவிஞர் வாலியின் பாடல் வரிகள் சிறப்பாக இருக்கும். வரலாற்றுப் படம் என்பதால் அதிக கவனத்துடன் படமாக்கியுள்ளோம்’ என்றார்.

The post ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sri ,Hayagriva Cine Arts ,Ramanuja ,T. Krishnan ,Radharavi ,Kota Srinivasa Rao ,YG Mahendran ,Shadows Ravi ,Sriman ,Anu Krishna ,Gayatri ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சித்திரை (ஈ) தந்த முத்திரை சீடர்கள்