*மூலப்பொருட்கள் கிடங்கை பார்வையிட்டார்
திருமலை : திருமலையில் உள்ள லட்டு கவுன்டர்களை கூடுதல் செயல் அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது கிடங்கில் நிலுவையில் வைக்கப்பட்ட கிடங்கை பார்வையிட்டார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இதனால் பக்தர்களின் அடிப்படை வசதிக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு தரமான உணவு, குடிநீர் போன்றவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருமலையில் உள்ள லட்டு கவுன்டர் வளாகத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா நேற்று ஆய்வு செய்தார். இதில் பிரசாதம் தயார் செய்யும் வகையில் பேஷ்கர், சீனிவாஸ் கவுன்டர்களில் லட்டு வழங்கும் செயல்முறையை விளக்கம் கூடுதல் செயல் அதிகாரிக்கு விளக்கம் அளித்தனர்.
பின்னர், லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் நிலுவை வைக்கப்பட்டுள்ள கிடங்கையும் ஆய்வு செய்து லட்டு நிலுவை மற்றும் சுவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் விஜிஓ நந்த கிஷோர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
The post திருமலையில் உள்ள லட்டு கவுன்டர்களை ஆய்வு செய்த கூடுதல் செயல் அதிகாரி appeared first on Dinakaran.