- சித்தூர் குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை
- சித்தூர்
- சித்தூர் குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை
- சித்தூர்...
- சித்தூர் குடியாத்தம்
- தின மலர்
*பொதுமக்கள் கோரிக்கை
சித்தூர் : சித்தூர் குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் ஏராளமான தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது.
சித்தூரில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும்சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். சித்தூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரதராமிக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 2 மணி நேரம் ஆகும்.
யாதமரி காவல் நிலையத்தில் இருந்து பரதராமி எல்லையான தமிழ்நாடு எல்லைக்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 18 கிலோமீட்டர் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கனரக வாகனங்கள் குழியில் சிக்கிக் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கடந்த மாதம் சித்தூர் வழியாக குடியாத்தம் செல்லும் கனரக வாகனம் சாலையில் உள்ள குழியில் மாட்டிக்கொண்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியோடு ஜேசிபி இயந்திரம் உதவியோடு லாரியை இழுத்து சாலை ஓரத்தில் விட்டார்கள். இதனால் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு அவதிப்பட்டார்கள். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் சித்தூர் குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை மிகவும் அற்புதமாக இருந்தது.
இதனால் சித்தூரில் இருந்து தமிழ்நாடு எல்லையான பரதராமிக்கு செல்ல வேண்டும் என்றால் வாகன ஓட்டிகள் அரை மணி நேரத்திற்குள் சென்று வந்தனர். ஆனால் தற்போது சித்தூரிலிருந்து பரதராமிக்கு செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 2 மணி நேரம் ஆகிறது. இதற்கு முக்கிய காரணம் சாலை முழுவதும் சுமார் 18 கிலோமீட்டர் வரை குண்டும் குழியுமாக இருக்கிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் இவ்வழியாக செல்லும் பொது மக்களும் பேரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழக எல்லையில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட காய்கறிகளை சித்தூர் காய்கறி மார்க்கெட்டுக்கு இருசக்கர வாகனங்கள் மூலமும் ஆட்டோக்கள் மூலமும் எடுத்து வருகிறார்கள். இதனால் இருசக்கர வாகன ஓட்டியில் செல்லும் விவசாயிகள் கீழே விழுந்து எழுந்து செல்லும் அவல நிலை ஏற்படுகிறது.
ஏராளமான விவசாயிகள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது காயம் அடைந்தும் கை கால் முறிவு ஏற்பட்டும், அவதிப்பட்டு வருகிறார்கள். அதே போல் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டுக்கள் சாலை பழுதடைந்ததால் வாகன விபத்து ஏற்பட்டு உயிரை பறித்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் பலமுறை மாநில போக்குவரத்து துறை அலுவலகத்தில் எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் செம்மண்களால் சாலையில் உள்ள குழிகளை மூடினார்கள். தற்போது மழை அடிக்கடி பெய்து வருவதால்சாலையில் கொட்டிய மண் மீண்டும் குலம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை போடாததால் ஓட்டு போடவில்லை
யாதமரி மண்டலம் போத்தல பட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்டலமாகும் எப்போதுமே போத்தளப்பட்டு சட்டமன்றத் தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆட்சியில் சித்தூர் குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையை சீர் அமைக்காததால் எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் யாரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை.
இதனால் அந்த கட்சி எங்கள் சட்டமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம் சாலை சீரமைக்காததால் எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த கட்சிக்கு தகுந்த பாடம் கற்பித்தார்கள். தற்போது தெலுங்கு தேச கட்சி வெற்றி பெற்றுள்ளது. இனியாவது ஆளும் கட்சி அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் சுமார் 18 கிலோ மீட்டர் வரை தமிழக எல்லையான பரதராமி வரை சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
The post சித்தூர் குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.