×

பட்டுக்கோட்டை அருகே உடும்புக்கறி வைத்திருந்தவர் கைது

பட்டுக்கோட்டை, ஆக. 7: பட்டுக்கோட்டை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் அரியவகை உடும்புக்கறி விற்கப்படுவதாக பட்டுக்கோட்டை வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதையடுத்து, அங்கு சென்ற பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான வனவர் சிவசங்கர், வனக்கப்பாளர்கள் கலைச்செல்வன், மணவாளன், வனக்காவலர் ராஜேந்திரன் ஆகியோர், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர் அண்ணாநகரைச் சேர்ந்த ராமு (56) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட அரிய வகை உடும்பு இறைச்சி 2 கிலோ பையில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மேல்விசாரணைக்காக பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகம் அழைத்து வந்தனர். பின்னர், வன அலுவலர் அகில்தம்பி அறிவுரைப்படி, வன உயிரின குற்ற வழக்கு (எண் 5/2024) பதிவு செய்யப்பட்டு ஒரத்தநாடு நீதிபதி (பாபநாசம் கூடுதல் பொறுப்பு ) முன்பு ஆஜர்படுத்தினர். அவரை, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட உடும்புக்கறியை மண்ணில் புதைத்து அழிக்கப்பட்டது.

The post பட்டுக்கோட்டை அருகே உடும்புக்கறி வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pattukottai ,Pattukottai Forest Department ,Orathanadu ,Forest Officer ,Chandrasekaran ,Forester ,Sivashankar ,Foresters ,Kalaichelvan ,Manavalan ,Forest Guard ,Rajendran ,
× RELATED பட்டுக்கோட்டை அரசு மாதிரி பள்ளியில்...