- உலக தாய்ப்பால் விழிப்புணர்வு தினம்
- ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை
- ஜெயங்கொண்டம்
- உலக தாய்ப்பால் தினம்
- ஜெயங்கொண்டம் அரசு
- மருத்துவமனை
- பீனிக்ஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளை
- தின மலர்
ஜெயங்கொண்டம், ஆக. 7: ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகிறது. உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு பீனிக்ஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளை சார்பில் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் பற்றியும், இதனால் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றியும் பொது மக்களிடம் விழிப்புணர்வை நிகழ்ச்சி நடந்தது.
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கீதா மணிவண்ணன் சிறப்புரையாற்றினார்.
மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பீனிக்ஸ் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் குவாகம் காவல் நிலைய உரையாற்றினார். குவாகம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பீனிக்ஸ் அறக்கட்டளையை சேர்ந்த பரமசிவம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.
The post ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு தினம் appeared first on Dinakaran.