×

நிதிநிலை அறிக்கை கண்டித்து கட்டுமானம் தொழில் கூட்டமைப்பு ஆர்பாட்டம்

 

பெரம்பலூர், ஆக. 7: கட்டுமானத்திற்கான ஜிஎஸ்டியையோ குறைக்காத நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்டுமானத் துறையை வளர்த்தெடுக்க எந்த அறிவிப்பையும் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் வெளியிடாதது, கட்டுமான பொருட்களின் ஜிஎஸ்டியையோ அல்லது கட்டுமானத்திற்கான ஜிஎஸ்டியையோ குறைத்திட எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் வெளியிடாததை கண்டிக்கிறோம்.

நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றக்கூடிய, அதிக அளவில் வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய துறையான கட்டுமானத்துறைக்கு மத்தியிலும், மாநிலத்திலும் தனி அமைச்சகத்தை ஏற்படுத்தவேண்டும். பொறியாளர் தங்களை பதிவுசெய்து கொள்ளவும், சிவில் துறை யில் பொறியாளர்களின் பணியை வளர முறைப்படுத்திடவும், பொறியாளர்கள் கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில இணைச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் ராசாராம், மாவட்ட தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். இதில் பிசிஇஏ அமைப்பின் மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வம், பிஏஐ அமைப்பின் பெரம்பலூர் மைய தலைவர் தர்மராஜ், ஏசிசிஇ (ஐ) பெரம்பலூர் மையத்தலைவர் மோகன் ராஜ், டிகேடிஎம்எஸ் அமைப் பின் மாவட்டத் தலைவர் சிவபெருமாள் மற்றும் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட் பலர் கலந்து கொண்டனர்.

The post நிதிநிலை அறிக்கை கண்டித்து கட்டுமானம் தொழில் கூட்டமைப்பு ஆர்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Construction industry federation ,Perambalur ,Construction and Land Industry Federation ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விதிகளை...