×

குட்கா முறைகேடு மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ வழக்கை அடிப்படையாக கொண்டு அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. குட்கா விற்பனை மூலமாக முறைகேடாக பெற்ற பணங்களை சட்டவிரோதமாக முதலீடுகள் செய்துள்ளதாகக் கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, முன்னாள் சென்னை கமிஷனர் உள்பட 27 பேருக்கு எதிராகவும் 4 நிறுவனங்களுக்கு எதிராகவும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில்வளவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஐயின் கூடுதல் குற்றபத்திரிகை கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை, செப்டம்பர் 3ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post குட்கா முறைகேடு மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Illegal Cash Transactions ,Gutka ,CHENNAI ,Delhi ,CBI Police ,CBI ,Illegal Money Exchange Enforcement Department ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக...