காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகளை குழு அமைத்து செய்ய குழுவின் தலைவராக கவுன்சிலர் சுரேஷ், மாநகராட்சியின் பணிகள் குழு தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், குழுவை கலைத்துவிட்டு மீண்டும் நேற்று தேர்தல் ஆணையர் செந்தில் முருகன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. இதில், 6 உறுப்பினர்களில் 4 பெரும்பான்மையான உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் இருப்பதால், புதிய பணிகள் குழு தலைவராக 48வது வார்டு கவுன்சிலர் ஆர்.கார்த்திக் என்பவர் ஒருமனதாக தேர்வாகியுள்ளார். தேர்வாகியுள்ள கவுன்சிலர் கார்த்திக்கு துணை மேயர் குமரகுருநாதன், மண்டல குழு தலைவர்கள் சாந்தி சீனிவாசன், செவிலிமேடு மோகன், சசிகலா கணேஷ், மல்லிகா ராமகிருஷ்ணன், சுப்பராயன், கமலக்கண்ணன் அன்புச்செழியன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
The post காஞ்சிபுரம் மாநகராட்சியின் புதிய பணி குழு தலைவர் தேர்வு appeared first on Dinakaran.