×

ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் ஸ்பெயினை பந்தாடியது நெதர்லாந்து

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி முதல் அரையிறுதியில் ஸ்பெயின் – நெதர்லாந்து அணிகள் நேற்று மோதின. தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணிக்கு 12வது நிமிடத்தில் ஜான்சன் ஜிப் அபாரமாக கோல் அடித்து 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார். 2வது கால் மணி நேர ஆட்டத்திலும் நெதர்லாந்து அணியின் கையே ஓங்கியிருந்தது. 20வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் பிரிங்க்மேன் தியரி கோல் அடிக்க, இடைவேளையின்போது நெதர்லாந்து 2-0 என முன்னிலை வகித்தது. பதில் கோல் அடிக்க ஸ்பெயின் வீரர்கள் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

3வது மற்றும் 4வது குவார்ட்டரிலும் ஸ்பெயின் கோல் பகுதியை முற்றுகையிaட்டு அலை அலையாக தாக்குதல் நடத்திய நெதர்லாந்து அணிக்கு வான் டேம் திய்ஸ் 32வது நிமிடத்திலும், டுகோ டெல்ஜென்கேம்ப் 50வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். ஆட்ட நேர முடிவில் நெதர்லாந்து 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை பந்தாடி பைனலுக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து, நேற்று இரவு நடந்த 2வது அரையிறுதியில் இந்தியா – ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் வெற்றி பெற்ற அணியுடன் நெதர்லாந்து இறுதிப் போட்டியில் மோதும்.

The post ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் ஸ்பெயினை பந்தாடியது நெதர்லாந்து appeared first on Dinakaran.

Tags : Netherlands ,Spain ,Olympic ,Johnson Zip ,Dinakaran ,
× RELATED வெனிசுலா முன்னாள் எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளர் ஸ்பெயினில் தஞ்சம்