×

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளரை அறிவித்தார் கமலா ஹாரிஸ்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அவரது உடல்நிலை காரணமாக அவர் போட்டியிடக்கூடாது என்று பலரும் அழுத்தம் கொடுத்தனர். இதன் காரணமாக அவர் கடந்த மாதம் ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஜோபைடன் விலகினார். தொடர்ந்து தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிந்தார்.

இதற்கிடையே ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படத் தேவையான அளவு வாக்குகளை அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரை கமலா ஹாரிஸ் இன்று அறிவித்துள்ளார்.

அதன்படி, டிம் வால்ஸ்டை ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாண கவர்னராக டிம் வால்ஸ் இருந்து வருகிறார். துணை ஜனாதிபதி வேட்பாளரான 60 வயதான டிம் வால்ஸ், மின்னெசோட்டா மாகாண எம்.பி.யாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளரை அறிவித்தார் கமலா ஹாரிஸ்! appeared first on Dinakaran.

Tags : Kamala Harris ,Democratic Party ,US presidential election ,Washington ,United States ,Trump ,Republican Party ,Biden ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் அதிபர் தேர்தல்...