×

அரக்கோணம் ரயில் நிலைய தண்டவாளத்தில் விரிசல்: சரிசெய்யும் பணி தீவிரம்

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலைய தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது காரணமாக ஒன்றாவது நடைமேடையில் வரக்கூடிய ரயில்களை மாற்று நடைமேடையில் வரவழைக்கப்பட்டு வருகிறது. தற்போது தண்டவாளத்தை சீர்செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையை அடுத்து மிகப்பெரிய ரயில் நிலையமாக திகழக்கூடியதாகவும் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கக்கூடிய அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஒன்றாவது நடைமேடையில் நிலைய மேலாளர் அலுவலகம் எதிரே திடீரென்று தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் பயணிகள் பயணம் செய்வர். இந்நிலையில் ரயில் பயணிகள் தண்டவாள விரிசலை பார்த்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த 20க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த தண்டவாளத்தில் 2 அங்குல அகலத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தை தற்காலிகமாக இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட இணைப்பு காரணமாக ஒன்றாவது நடைமேடைக்கு வரும் அனைத்து ரயில்களும் மாற்று ரயில் மேடைகளில் இயக்க ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டு ரயில்களை இயக்கி வருகின்றனர். மேலும் பயணிகள் தண்டவாள விரிசலை கண்டு உடனடியாக தகவல் கொடுத்ததால் மிகப்பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. முக்கிய ரயில் வழித்தடமாக உள்ள இந்த தண்டவாள பணிகளை ரயில்வே ஊழியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் ரயில் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்….

The post அரக்கோணம் ரயில் நிலைய தண்டவாளத்தில் விரிசல்: சரிசெய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Hakkonam Railway Station ,Hemisphere Train Station ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...