×

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் பணிகளை பணிகளை விரைந்து மேற்கொள்ள அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை: தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை (தே.நெ.67)யில், துவாக்குடி முதல் பால்பண்ணை வரை, உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் பணிகளை விரைந்து மேற்கொள்ள, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இன்று (6.8.2024) சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்குவழிச் சாலையாக ஏற்கெனவே மேம்படுத்தப்பட்டுவிட்டது. துவாக்குடி முதல் பால்பண்ணை வரை, சுமார் 14.49 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிலஎடுப்புப் பணிகள் மேற்கொள்ள பொது மக்கள் கடுமையான ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டதால், திருச்சி நகர் பகுதியில், நான்குவழிச் சாலையில் சேவைச் சாலை இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.

துவாக்குடி மற்றும் பால்பண்ணை இடையே மொத்தம் 14.49 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்குவழி உயர்மட்டச் சாலை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கோரியது. ஏனெனில் இந்த சாலை திருச்சி மாநகரின் நகரப்பகுதிகளான திருவெறும்பூர், பாரத் கனரக எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் தொழிற்சாலை வளாகம், (BHEL) மற்றும் தேசிய தொழில்நுட்ப கழகம்(NIT) ஆகியவை உள்ளடக்கி அமைந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களும் மற்றும் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார்கள்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை அரசு செயலாளர் டாக்டர் ஆர்.செல்வராஜ், தேசிய நெடுஞ்சாலை அலகு தலைமைப் பொறியாளர் எம்.பன்னீர்செல்வம், சிறப்பு அலுவலர்(டெக்னிக்கல்) இரா.சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் ப.செல்வகுமார், மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் பணிகளை பணிகளை விரைந்து மேற்கொள்ள அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,A. V. Velu ,Thanjavur-Trichy National Highway ,CHENNAI ,Minister for Public Works, ,Highways and Minor Ports ,AV Velu ,Chief Secretariat ,Thanjavur – Trichy National Highway ,TN 67 ,Duvakkudi ,Palpannai ,Dinakaran ,
× RELATED கிழக்கு கடற்கரை சாலைப் பணிகளை...