×

பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும் இருக்க இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்!

டெல்லி: பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும் இருக்க இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக நடந்து வரும் தீவிர வலதுசாரிகளின் போராட்டம் கலவரமாக மாறியதால் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து வெளியுறவுத் துறையின் அறிவுறுத்தலின்; “லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்தியாவிலிருந்து வருபவர்கள் இங்கிலாந்தில் பயணம் செய்யும் போது விழிப்புடன் இருக்கவும், கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உள்ளூர் செய்திகள் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு ஏஜென்சிகள் வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றுவதும், போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்ப்பதும் நல்லது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும் இருக்க இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.

Tags : Indian Foreign Ministry ,Indians ,Britain ,Delhi ,Foreign Office ,Foreign Ministry ,London ,
× RELATED பிரிட்டனின் பிரதமர் தனது...