டெல்லி: தமிழ்நாட்டில் இருக்கும் சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த ஆவணம் இல்லை, அந்த ஆவணம் இல்லை என பொத்தாம் பொதுவாக அமலாக்கத்துறை கூறுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை நாங்கள் முடிக்க விரும்புகிறோம், நீதிமன்ற நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஆட்சியர்களுக்கு எதிரான அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிரான வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் இருக்கும் சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!! appeared first on Dinakaran.