×

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வனப்பகுதி வழியாக சென்ற 24 பேருக்கு அபராதம்

*வனத்துறையினர் நடவடிக்கை

நெல்லை : களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஜீரோ பாயிண்ட் வழியாக காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சென்று திரும்பிய அயன்சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 இளைஞர்களை வனப்பாதுகாப்பு பணியில் இருந்த வனப்பணியாளர்கள் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்து வன உயிரினங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து துணை இயக்குநர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் இளையராஜா உத்தரவுப்படி அயன்சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 பேர் மீதும் வன குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் இணக்க கட்டணம் விதிக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் இனி வரும் காலங்களில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது, வன உயிரினங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது வனச்சட்டங்களின் படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வனப்பகுதி வழியாக சென்ற 24 பேருக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Karaiyar Sorimuthu Ayyanar temple ,Ayansinghampatti ,Kalakkadu Mundanthurai ,Ambasamutram forest ,
× RELATED முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்