- குர்தாலா அருவி
- தென்காசி
- கூர்த்தால மெயின் அருவி
- கூர்த்தால பிரதான நீர்வீழ்ச்சி
- குர்தாலா
- மேற்குத்தொடர்ச்சி
தென்காசி: குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றால மெயின் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத்தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில், நேற்று மாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக அப்புறப்படுத்தி குளிப்பதற்கு தடை விதித்தனர். இதன் காரணமாக அருவியில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் மற்றும் குற்றாலத்திற்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் ஆகியோர் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் அருவியில் தண்ணீரின் அளவு குறைந்ததை அடுத்து மெயின் அருவி, ஐந்தருவியில் மீண்டும் கற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து காலையில் குற்றாலம் பகுதியில் லேசான வெயிலுடன் இதமான குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் பழைய குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.
The post குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.