×

கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் : வைகோ

டெல்லி : கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், “இந்திய மீனவர்கள் கொலையை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகின்றனர். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா இல்லையா என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் : வைகோ appeared first on Dinakaran.

Tags : Waiko ,Delhi ,Sri Lankan Navy ,Vaiko ,Rajya Sabha ,government ,Tamil Nadu ,
× RELATED இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்...