×

சாணிப்பவுடர் குடித்து இளம்பெண் தற்கொலை

 

ஈரோடு, ஆக.6: ஈரோடு மாவட்டம் கடம்பூர் பசுவண்ணபுரம் ஓசப்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (32). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கடம்பூர் கெம்பநாயக்கனூரை சேர்ந்த சந்தியா (24) என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சிவக்குமார் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வந்தார். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், வேனை விற்றுவிட்டார். இதற்கிடையில் சந்தியாவுக்கும், அவரது மாமியாருக்கும் பிரச்னை ஏற்பட, தனிக்குடித்தனம் செல்ல முடிவெடுத்தனர்.

இந்நிலையில், மனவேதனையில் இருந்த சந்தியா நேற்று வீட்டில் சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தியாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தியா இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இருப்பதால் ஆர்டிஓவும் விசாரணை நடத்தி வருகின்றார்.

The post சாணிப்பவுடர் குடித்து இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Sivakumar ,Kasuvannapuram Oshapalayam, Kadampur, Erode district ,Sandhya ,Kempanayakkanur, Kadampur ,
× RELATED ஈரோட்டில் பூண்டு விலை தொடர்ந்து உச்சம்