×

உடையார்பாளையம் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

 

ஜெயங்கொண்டம், ஆக. 6: உடையார்பாளையம் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். முன்னதாக உதவி ஆசிரியர் வானதி வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு சார்பாக தமிழக முதல்வரின் காணொளி பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

அதன்பின்னர் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு செய்வதன் அவசியம் பற்றி விளக்கப்பட்டது. பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர்களின் பங்கு எந்தெந்த வகையில் முக்கியம் என்பது குறித்து கூறப்பட்டது. பள்ளியின் முன்னேற்றத்திற்கு பெற்றோர்களின் அவசியம் பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஆறுமுகம், மலர்கொடி செய்திருந்தனர். நிறைவாக உதவி ஆசிரியர் கனிமொழி நன்றி கூறினார்.

The post உடையார்பாளையம் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : School Management Committee ,Udayarpalayam Middle School ,Jayangondam ,School Management Committee Restructuring Awareness Meeting ,Udayarpalayam North ,Middle School ,Headmaster ,Hari Sundarraj ,School ,Management ,Committee ,Wodeyarpalayam Middle School ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் கலைத் திருவிழா