×

ஆடி அமாவாசையை முன்னிட்டுவரத ஆஞ்சநேயர் கோயிலில் ஊஞ்சல் சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்

பெரணமல்லூர், ஆக.6: பெரணமல்லூர் வரத ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் சேவையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பெரணமல்லூர் பேரூராட்சியில் பழமை வாய்ந்த வரத ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் வடக்கு முகம் பார்த்து இருப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோயிலில் அமாவாசை நாட்களில் நடைபெறும் ஊஞ்சல் தாலாட்டில் கலந்து கொண்டு வழிபட்டால் கடன் பிரச்னை, திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதன்படி, நேற்று முன்தினம் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை மூலவர் வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர், மாலை உற்சவர் வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து பூக்களால் சிறப்பாக அலங்காரம் செய்து ஊஞ்சல் சேவை நடத்தினர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post ஆடி அமாவாசையை முன்னிட்டுவரத ஆஞ்சநேயர் கோயிலில் ஊஞ்சல் சேவை: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Anjaneyar Temple ,Aadi Amavasai ,Peranamallur ,Adi ,Varada Anjaneyar ,Temple ,Varada ,Anjaneya ,Peranamallur Municipality ,Moolavar ,
× RELATED முதியவர் சடலமாக மீட்பு