×

159 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணை

சேந்தமங்கலம், ஆக.6: எருமப்பட்டி ஒன்றியத்தில் 159 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டும் பணி ஆணையை ராஜேஷ்குமார் எம்பி வழங்கினார். எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்டும் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். பொன்னுசாமி எம்எல்ஏ, அட்மா குழு தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். விழாவில் ராஜேஷ்குமார் எம்பி கலந்துகொண்டு 159 பயனாளிகளுக்கு பணி ஆணையை வழங்கினார்.

அப்போது அவர் பேசுவையில், பயனாளிகள் பணி உத்தரவை பெற்றுக் கொண்டு உடனடியாக வீட்டின் கட்டுமான பணிகளை ஆரம்பிக்க வேண்டும். குறித்த காலத்திற்குள் கட்டிடப் பணிகளை முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சங்கீதாசுகுமார், பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விமலா சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சுகிதா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post 159 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணை appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Rajesh Kumar ,Erumapatti Union ,Erumapatti Panchayat Union Office ,
× RELATED நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் திமுக...