×

காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவை ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பட்டுப்பூங்காவை ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரத்தில் உள்ள பட்டுப்பூங்காவை, ஆஸ்திரேலியா நாட்டின் பொருளாதார பிரிவு முதன்மை செயலாளர் ஜோய்வுட்லி தலைமையில், அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தை கேட்டறிந்தனர்.

தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் பட்டு புடவைகள் உற்பத்தி செய்யப்படும் தொழில் நுட்பங்கள், பட்டுப்பூங்காவால் கிடைத்துள்ள வேலைவாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள், பட்டு சேலைகளின் தரம் ஆகியன குறித்து பட்டுப்பூங்காவின் தலைவர் சுந்தர்கணேஷ் விரிவாக விளக்கி கூறினார்.

மேலும், ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகளை காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பட்டுப்பூங்காவின் செயல் இயக்குநர் ராமநாதனிடம் விவாதித்தனர். கலந்துரையாடலின்போது பட்டுப்பூங்கா இயக்குநர்கள், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவை ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Australian ,Kanchipuram ,Australian Consular ,Battupoonga ,Australia ,Principal Secretary ,Joywoodli ,Economic Division of Australia ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்ணாவின்...