×

கீச்சலம் கிராம ஆதிதிராவிட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், கீச்சலம் கிராம காலனியில் 200 ஆதிதிராவிட வகுப்பு குடும்பத்தினர் மிகுந்த வறுமையில் வீடு வசதி எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். எனவே தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வீட்டுமனைகளை கீச்சலம் கிராம காலனி மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2015ம் ஆண்டு முதல் கோரிக்கைகளாக மனு கொடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் கீச்சலம் கிராம காலனி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன் தலைமையில் மாவட்ட துணை அமைப்பாளர் கே.ஈஸ்வரன், வழக்கறிஞர் ஜார்ஜ் முல்லர், பன்னீர் கங்காதரன் மற்றும் கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

The post கீச்சலம் கிராம ஆதிதிராவிட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மனு appeared first on Dinakaran.

Tags : Keichalam Village Addiravita ,THIRUVALLUR ,KEICHALAM ,RURAL COLONY ,ADITRAVIT ,Government of Tamil Nadu ,Keichalam Grama Colony ,Keichalam Village Aditravit ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்...