×

ஸ்ரீ ஓசூரம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மப்பேட்டில் ஸ்ரீ ஓசூரம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த 26ம் தேதி வெள்ளிக்கிழமை ஓசூரம்மன், மன்னியம்மன், செங்காட்டம்மன் ஆகிய கிராம தேவதைகளுக்கு காப்பு கட்டி முதல் நாள் உற்சவம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தொடர்ந்து 30ம் தேதி கரகம் நிகழ்ச்சியும், நேற்றுமுன்தினம் 6 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.

இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு லட்சுமண் சுருதியின் இன்னிசை பக்தி பாடல்கள் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு பட்டரை பெருமந்தூர் ரூபன் குழுவினரின் நாடகமும் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை விடார்த்தி உற்சவமும், அன்னதானமும் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post ஸ்ரீ ஓசூரம்மன் கோயிலில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Dimithi Festival ,Sri Osuramman Temple ,Tiruvallur ,Mappet ,Utsavam ,Osuramman ,Manniyamman ,Sengattamman ,
× RELATED மோகனூர் அருகே கோயிலில் தீமிதி விழா கோலாகலம்